17 ஆண்டுகளுக்கு முன் யூடியூபில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோ!
17 ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட முதல் வீடியோவை யூடியூப் நிறுவனம் இப்போது பகிர்ந்துள்ளது.
யூடியூப் (YouTube) நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதிவேற்றப்பட்ட நூறாயிரக்கணக்கான வீடியோக்கள் மூலம், இந்த தளம் கிட்டத்தட்ட ஒவ்வொரு நபருக்கும் மனநிலைக்கு ஏற்ற எந்த உள்ளடக்கத்தையும் வழங்கும் தளமாக உள்ளது.
ஆனால் இது எப்படி தொடங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா? யூடியூப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம், இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
இதைப் பற்றி சிந்தித்தால், இது சிறியதாக தொடங்கபட்டது என்று அதில் குறிப்பிட்டுள்ளது. இது YouTube இணை நிறுவனர் ஜாவேத் கரீமின் (Jawed Karim) தளத்தில் முதலில் பதிவேற்றத்தைக் காட்டுகிறது.
17 ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட 19 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் உள்ள யானை அடைப்புக்கு முன்னால் கரீம் நிற்பதைக் காட்டுகிறது.
"சரி, இதோ நாம் யானைகளுக்கு முன்னால் இருக்கிறோம். அவைகளைப் பற்றிய அருமையான விடயம் என்னவெனில், உண்மையில், உண்மையில், மிகவும் நீளமான தும்பிக்கைகளைக் கொண்டிருப்பதுதான், அது மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் சொல்ல வேண்டியது அவ்வளவுதான்" என்று அந்த வீடியோவில் கரீம் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமாக, அவரது சரிபார்க்கப்பட்ட யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட ஒரே வீடியோ இதுதான். இந்த வீடியோ 235 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செவ்வாய் கிரகத்தில் விசித்திர பாறை! நாசா கியூரியாசிட்டி ரோவரின் புகைப்படம் வைரல்
யூடியூப் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 14, 2005 அன்று தொடங்கப்பட்டது. ஓன்லைன் வீடியோ பகிர்வு தளம் கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகம் பார்வையிடப்பட்ட இரண்டாவது இணையதளமாகும்.
YouTube-ல் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மணிநேர வீடியோக்களை மொத்தமாகப் பார்க்கிறார்கள் என்று இணையதளம் தெரிவித்துள்ளது.