பிரான்சில் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபர் இவர் தான்! 3-வது தொற்றை பெறும் ஆபத்தில் நாடு என அச்சம்
பிரான்சில் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 78 வயது பெண்ணின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் புதிய வகையில் மாறுதல் பெற்று, அதிக வேகமாக பிரித்தானியாவில் பரவி வருவதால், ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன் படி பார்த்தால், பிரான்சில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 15.000 பேரிற்குத் கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஆகக்குறைந்தது 1.500 பேர் நாள் ஒன்றிற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று முதல் கொண்டுவரப்பட்டது.
ஆரம்பிக்கப்பட்ட கொரோனத் தடுப்பு ஊசியின் முதல் ஊசி Mauricetteஎனப்படும் 78 வயது பாட்டிக்கு போடப்பட்டது.செவ்ரோனில் (Seine-Saint-Denis) உள்ள René-Muret மருத்துவமனையில் இந்த ஊசி போடப்பட்டது.
இரண்டாம் உலகமகா யுத்தத்தைப் பார்த்த இந்தப் பெண்மணி, தனக்கு எந்த விதப் பதற்றமும் இல்லை எனவும் தான் இந்தச் சோதனைக்கு தன்னை உட்படுத்தத் தாயராகவே உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வைப் பெரும் நெகிழ்வுடன் இல்-து-பிரான்ஸ் பிராந்திய சுகாதார நிறுவனத்தின் (ARS) தலைமை இயக்குநர் Aurélien Rousseau தனது டுவிட்டர் பக்கத்தில், வரலாற்றின் ஓர் அங்கம் என தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதார அமைச்சர், கொரோனாத் தடுப்பூசிகளின் வீரியம் மற்றும் அதன் வெற்றிகள் உடனடியாக அறிய முடியாதவை.
ஆனால் பிரான்சின் பல மருத்துவக் குழுக்களும், விஞ்ஞான ஆலோசகர்களும் எதிர்வரும் வாரங்களில், பிரான்சில் மிகவும் வீரியமான, ஆபத்தான, மூன்றாவது கொரோனாத் தொற்றலை ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் கட்ட உள்ளிருப்பின் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளனர். மக்களின் பாதுகாப்பிற்காக நாம் எந்தவிதக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கத் தவறியதில்லை. மூன்றாம் கட்ட ஊரடங்கு அவசியம் என்றால் அதையும் மறுப்பதற்கில்லைஎனப் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.