விண்வெளி பயணம்: வரலாற்றில் இடம்பிடித்த ஜேர்மன் பெண்
விண்வெளிக்குச் சென்ற முதல் ஜேர்மன் பெண் என்ற பெருமையை அடைந்துள்ளார் Rabea Rogge என்னும் பெண்.
வரலாற்றில் இடம்பிடித்த ஜேர்மன் பெண்
நேற்று திங்கட்கிழமை, அதாவது, மார்ச் மாதம் 31ஆம் திகதி, விண்வெளிக்குச் சென்றுள்ளார், Rabea Rogge.
ரோபோடிக்ஸ் ஆய்வாளரான Rabea, ஸ்பேஸ் எக்ஸின் Falcon 9 என்னும் ராக்கெட்டில், 3 விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்குச் சென்றுள்ளார்.
இதுவரை மனிதர்கள் யாரும் பயணிக்காத பூமியின் துருவங்களுக்குச் செல்லவிருக்கும் முதல் விண்வெளித் திட்டமான Fram2 என அழைக்கப்படும் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் சென்றுள்ளார் Rabea.
சூரிச்சிலுள்ள ETHஇல் மின் பொறியியலும், தகவல் தொழில்நுட்பமும் கற்ற Rabea, நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
இந்த விண்வெளி பயணத்தில் பங்கேற்றதன் மூலம், விண்வெளிக்குச் சென்ற முதல் ஜேர்மன் பெண் என்ற பெருமையை Rabea அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |