பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் புகைப்படம்: 200 டோரி எம்.பிக்கள் ஆதரவில் அபார வெற்றி
200 டோரி எம்.பிக்கள் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு.
பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் புகைப்படம் வெளியீடு.
பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து 1922 கமிட்டியின் உறுப்பினர்களுடன் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ், பதவியிலிருந்த 44 நாட்களிலேயே ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து நடைபெற்ற பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் பென்னி மோர்டான்ட் 100 டோரி எம்.பிக்களின் ஆதரவை பெறத் தவறியதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக்( Rishi sunak) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
SKY NEWS
வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 2 மணிக்கு நிறைவடைந்த நிலையில் ரிஷி சுனக் 200 டோரி எம்.பிக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் தலைமை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 1922 கமிட்டியின் உறுப்பினர்களுடன் நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக் எடுத்த முதல் புகைப்படம் வெளிவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் ரிஷி சுனக்: பென்னி மோர்டான்ட் விலகல்
இந்த புகைப்படத்தில் ரிஷி சுனக் மகிழ்ச்சியுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
SKY NEWS
SKY NEWS