ஒரு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்..! இவர் பற்றி தெரியுமா?
இன்று திரையுலகிலேயே ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் பல பிரபலங்கள் இருகின்றனர். ஆனால் முந்தைய காலத்தில் முதன்முறையாக ஒரு படத்திற்கு ரூ.1 கோடி வாங்கிய நடிகர் யார் என உங்களுக்கு தெரியுமா?
ஒரு படத்திற்கு 1 கோடி வசூலித்த நடிகர்
1992 ஆம் ஆண்டில் அமிதாப் பச்சன் பாலிவுட்டின் பெரிய தூணாக இருந்தார். கோலிவுட்டில் ரஜினிகாந்த் தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக உறுதிப்படுத்திக் கொண்டார்.
ஆனால், இந்த இருவரும் ஒரு படத்துக்கு 1 கோடி சம்பளம் வாங்கவில்லை. இதை டோலிவுட்டில் ஒரு நடிகர் செய்தார்.
ஆபத்பாந்தவுடு படத்திற்காக மெகாஸ்டார் சிரஞ்சீவி ரூ.1.25 கோடி சம்பளத்தை வாங்கினார். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவரே.
அப்போது அமிதாப் பச்சன் சுமார் ரூ.90 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
ஆபத்பாந்தவுடு திரைப்படமானது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படமே சிரஞ்சீவியை தெலுங்குத் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் நடிகராக நிலைநிறுத்தியது எனலாம்.
2008 ஆம் ஆண்டில், அரசியலில் கவனம் செலுத்துவதற்காக திரைப்படங்களை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த செய்தி அனைத்து ரசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக படங்களில் இருந்து விலகி இருந்தார். பின் 2017 ஆம் ஆண்டில் 'கைதி எண் 150' என்ற படத்தின் ஊடாக மீண்டும் திரையுலகிற்கு வந்தார்.
பின் கமல்ஹாசன் 1994 இல் ரூ. 1 கோடி வசூலித்த அடுத்த நட்சத்திரமாக கூறப்பட்டார். அதையடுத்து ரஜினிகாந்தும் இதையே பின்பற்றினார்.
அமிதாப் பச்சன் 1996 இல் ஓய்வு முடிந்து திரும்பியபோது, அவரும் ஒரு படத்திற்கு ரூ.1 கோடி வசூலிக்கத் தொடங்கினார்.
1996 ஆம் ஆண்டில், ஒரு படத்திற்கு இவ்வளவு தொகையை வசூலித்த முதல் இந்திய நடிகை ஸ்ரீதேவி ஆனார்.
இன்று, இந்த சம்பளத்தை இந்தியாவின் பெரும்பாலான நட்சத்திரங்கள் பெற்று வருகிறார்கள். ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் இந்த சம்பளமானது மதிப்புக்குரியதாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |