முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற ஷேன் வார்னே படை! தோனியின் CSK அணியை விரட்டியடித்த ப்ளாஸ்பேக்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். வார்னே அவுஸ்திரேலிய வீரர் என்றாலும் கூட உலகளவில் அவர் மீது கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றுமே பிரியம் உண்டு.
ஐபிஎல் தொடரிலும் பட்டையை கிளப்பியவர் வார்னே. இன்று நமக்கு கிடைத்த ஜடேஜா, யூசுப் பதான், வாட்சன் என அனைவரும் வார்னேவின் பயிற்சி பட்டறையில் இருந்து வந்தவர்கள் தான்.
2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வார்னேவை, முதல் ஐபிஎல் தொடரான 2008 தொடருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
சென்னைக்கு தோனி, டெல்லிக்கு சேவாக், மும்பைக்கு சச்சின், ஐதராபாத்துக்கு கில்கிறிஸ்ட், பஞ்சாப்க்கு யுவராஜ் என ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக இருந்தன.
ஆனால் வார்னே தலைமையிலான அணியின் குறிப்பிட்டு சொல்லும் அளவு எந்த வீரரும் இல்லை. ராஜஸ்தான் அணி எல்லாம் சுத்த வேஸ்ட் என்று வெளிப்படையாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
அப்போது யாருமே எதிர்பாராத ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதியது. இதில் கனவில் யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள், ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்லும் என்று..!! கோப்பையை வாங்கிய வார்னே, ஜடேஜாவை ஒரு ராக் ஸ்டார் என்று பாராட்டினார்.