உலகில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட முதல் ஆண் மரணம்
உலகத்திலேயே கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட முதல் ஆணான பிரித்தானியர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். உலகிலேயே கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட முதல் நபர்களில் ஒருவரான William Shakespeare என்பவர், தனது 81ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
Bill என்று அழைக்கப்படும் William Shakespeare, டிசம்பர் 8ஆம் திகதி பைசர் நிறுவன தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட விடயம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியானது. முன்னாள் ரோல்ஸ் ராய்ஸ் ஊழியரான Bill, பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த வியாழனன்று உயிரிழந்துள்ளார்.
அவர் ஏற்கனவே நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததும், தடுப்பூசி பெற்றுக்கொள்ளும்போதும்கூட அவர் மருத்துவமனையிலேயே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில், உலகில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட முதல் ஆண் Bill என்றாலும், அவருக்கு முன் Margaret Keenan (91) என்ற பெண் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதால், அவர் உலகில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இரண்டாவது நபர் ஆகிறார்.