One in, one out திட்டம்... சட்டப்படி பிரான்சிலிருந்து பிரித்தானியா வந்துள்ள முதல் புலம்பெயர்ந்தோர் குடும்பம்
பிரித்தானியாவும் பிரான்சும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் செய்துகொண்டுள்ள One in, one out திட்டத்தின் கீழ், பிரான்சிலிருந்து முதல் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியா வந்தடைந்துள்ளார்கள்.
One in, one out திட்டம்...
பிரித்தானியாவும் பிரான்சும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள்
பிரித்தானியா வந்துள்ள முதல் புலம்பெயர்ந்தோர் One in, one out திட்டத்தின் கீழ், சிறு படகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் நான்கு பேரை பிரித்தானியா பிரான்சுக்கு திருப்பி அனுப்பியது.
பதிலுக்கு, பிரான்சிலிருந்து மூன்று பேர் அடங்கிய ஒரு புலம்பெயர் குடும்பம் பிரித்தானியா வந்தடைந்துள்ளது. அதில் ஒரு சிறுபிள்ளையும் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |