ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் MLA...! யார் இந்த சோபியா பிர்தௌஸ்?
ஒடிசா அரசியல் வரலாற்றில் முதல் இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ-வான சோபியா ஃபிர்தௌஸ் என்பவர் யார்? அவரது வரலாறு குறித்து பார்ப்போம்.
ஒடிசா சட்டமன்ற தேர்தலில் வெற்றி
சமீபத்திய தேர்தலில், சோபியா ஃபிர்தௌஸ் என்ற இளம் பெண் காங்கிரஸ் சார்பில் பாராபட்டி சுட்டதொகுதியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தார்.// இது ஓடிசா சட்டமன்றத்தில் முதல் முறையாக ஒரு இஸ்லாமிய பெண் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்.
சோபியா யார்?
32 வயதான சோபியா, முகமது மொகிமின், காங்கிரஸ் மூத்த தலைவர் மகள்.//கலிங்கா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIMB) நிர்வாக மேலாண்மையில் MBA முடித்தவர்.
ரியல் எஸ்டேட் துறையில் சிறந்து விளங்கும் சோபியா, CREDAI-யின் புவனேஸ்வர் பிரிவின் தலைவராகவும், IGBC-யின் இணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது தனது தந்தையின் மெட்ரோ கட்டுமான நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றுகிறார்.
குடும்ப பின்னணி மற்றும் அரசியல் நுழைவு
சோபியாவின் தந்தை முகமது மொகிமின் 2019 தேர்தலில் பாராபட்டி சுட்ட தொகுதியில் MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சில ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதால், அவரது பதவி பறிக்கப்பட்டது.
இதையடுத்து, தந்தைக்கு பதிலாக சோபியா தேர்தலில் போட்டியிட்டார்.
தேர்தல் வெற்றி மற்றும் சாதனைகள்
பாஜக வேட்பாளர் பூர்ண சந்திரா மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சோபியா வெற்றி பெற்றார்.
இதன் மூலம் ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் MLA என்ற பெருமைக்குரியவர் ஆனார்.
குறிப்பிடத்தக்க வகையில், 1972-ல் இதே தொகுதியிலிருந்து மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் நந்தினி சத்பதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சோபியாவின் வெற்றி ஒடிசாவில் பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு ஒரு ஊக்கமளிக்கும் செய்தியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |