மன்னராக பொறுப்பேற்றபின் சார்லசின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம்: பக்கிங்காம் மாளிகை வெளியிட்டது...
மன்னர் சார்லஸ், அவரது மனைவியாகிய கமீலா, வேல்ஸ் இளவரசாக பொறுப்பேற்றுள்ள இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்றை பக்கிங்காம் மாளிகை வெளியிட்டுள்ளது.
அது, இளவரசர் சார்லஸ், மன்னராகப் பொறுப்பேற்றபின், வெளியிடப்பட்டுள்ள முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் ஆகும்.
இளவரசர் சார்லஸ் மன்னராகப் பொறுப்பேற்றபின், அவரது முதல் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை பக்கிங்காம் மாளிகை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில், மன்னர் சார்லஸ், அவரது மனைவியாகிய கமீலா, வேல்ஸ் இளவரசாக பொறுப்பேற்றுள்ள இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்த புகைப்படம், உலகம் முழுவதிலுமுள்ள பல நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் ராஜகுடும்பத்தினர் ஆகிய அதிகாரம் மிக்க தலைவர்களை பிரித்தானிய மன்னரும் வேல்ஸ் இளவரசரும் சந்திக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றின்போது எடுக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முதலான 500 பேர் கலந்துகொண்டுள்ளார்கள்.
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர், மன்னர் சார்லசுக்கு ஆதரவாக நின்றதன், நிற்பதன் அடையாளமாக அந்த புகைப்படம் காட்சியளிக்கிறது.
வேல்ஸ் இளவரசராக பொறுப்பேற்றுள்ள இளவரசர் வில்லியம், தனது பாட்டியாரான மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தும்போது, நான் என் பாட்டியாரின் நினைவை கௌரவிக்கும் வகையில், மன்னராகிய என் தந்தையாருக்கு என்னால் இயன்ற எல்லா வழிகளிலும் ஆதரவாக நிற்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.