பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் அரச வாரிகளின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு!
மன்னர் மூன்றாம் சார்லஸின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம்.
மன்னரின் முதல் குறிப்பிடத்தக்க அரசு நிகழ்வாகவும் விவரிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ், குயின் கான்ஸார்ட் கமீலா, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோரின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை சுமார் 70 ஆண்டுகள் வரை ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்று கொண்டார்.
மேலும் குயின் கான்ஸார்ட்-ஆக மன்னரின் மனைவி கமீலாவும், வேல்ஸின் புதிய இளவரசராக வில்லியமும், இளவரசியாக கேட் மிடில்டனும் பட்டம் பெற்றனர்.
sky
இதனை தொடர்ந்து, இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர், குயின் கான்ஸார்ட், புதிய வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி ஆகியோர் எடுத்துக் கொண்ட முதல் அதிகாரப்பூர்வமான புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.
ராணியின் மறைவிற்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்து இருந்த அரச தலைவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விருந்தினர்களுக்கான வரவேற்புக்காக மன்னர், குயின் கான்ஸார்ட், இளவரசர், இளவரசி ஆகிய நால்வரும் ஒன்றிணைந்த போது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
sky
இந்த வரவேற்பு மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு முந்தைய நாள் மாலை நடைபெற்றது, இதில் மன்னர், இளவரசர் என நான்கு பேரும் கருப்பு நிற ஆடையை அணிந்து இருந்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு; மன்னர் சார்லஸ் முதல் வெளிநாட்டு பயணம்: பக்கிங்ஹாம் அரண்மனை முக்கிய அறிவிப்பு
இது மன்னரின் முதல் குறிப்பிடத்தக்க அரசு நிகழ்வாகவும், அத்துடன் உலகத் தலைவர்கள் மற்றும் உலக அரசியல் பிரமுகர்களின் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.