ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்துக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை
ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்து தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.
முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை
ஒலிம்பிக் போட்டிகளில், 50m air rifle போட்டியில் Chiara Leone (26) என்னும் பெண், தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
Chiara, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இரண்டாவது பெண்ணாவார். 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் அவர் சுவிட்சர்லாந்துக்கான முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
அவரது அறைத்தோழியான Nina Christen, 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், பெண்கள் துப்பாக்கிச் சுடும்போட்டியில், சுவிட்சர்லாந்துக்கான தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றிய முதல் சுவிஸ் பெண் என்னும் பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Keystone-SDA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |