அதிக விலையாக இருந்தாலும் Honda NX500 பைக்கை வாங்கிய முதல் நபர்: அப்படி என்ன ஸ்பெஷல்?
Honda NX500 பைக்கை வாங்கிய முதல் நபர் யார் என்பதை பற்றியும், பைக்கின் சிறப்பம்சங்கள் பற்றியும் பார்க்கலாம்.
Honda NX500
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் Honda NX500 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கானது இந்தியாவில் ரூ.5.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த பைக்கின் அதிகாரபூர்வமான டெலிவெரிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. Honda Big Wing Dealership Showroom -களில் இந்த விலையுயர்ந்த பைக்குகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய மாநிலமான ஹரியானா, குருக்ராமில் உள்ள ஹோண்டா Big Wing Dealership Showroom ஒன்றில் அபிஷேக் மிஷ்ரா என்ற வாடிக்கையாளர் ஒருவர், NX500 பைக்கை டெலிவிரி செய்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மேலும், அவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ள்ளார்.
இந்த Honda NX500 பைக்குகள் வெளிநாட்டில் உற்பத்தி செய்ய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. பின்னர், வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது. இதனால் கூட இதன் விலை அதிகமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
CB500X பைக்கை காட்டிலும் புதிய NX500 பைக்கில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், UST telescopic fork suspension, முன் சக்கரத்தில் Double disc brake set-up, A 5-inch TFT instrument screen ஆகிய அம்சங்கள் உள்ளன.
இந்த அம்சங்கள் CB500X பைக்கில் இடம்பெறவில்லை. இந்த பைக்கை Grand Prix Red, Matte Gunpowder Black Metallic, Pearl Horizon White ஆகிய ஆப்ஷன்களில் வாங்கலாம். முதல் வாடிக்கையாளரான அபிஷேக் மிஷ்ரா இதனை Grand Prix Red நிறத்தில் வாங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |