லண்டனில் பள்ளிக்கு செல்லும் போது குத்தி கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்! பட்டப்பகலில் நடந்த பரிதாபம்: வெளியான புகைப்படம்

London UnitedKingdom
By Kaviarasan Jun 13, 2021 04:51 PM GMT
Report

லண்டனில் 15 வயது பள்ளி மாணவன் ஒருவன் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த சிறுவனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. 

மேற்கு லண்டனின் Hayes-ல் உள்ள Global Academy மேல்நிலைப் பள்ளிக்கு அருகே காலை உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில், Jalan Woods-Bell என்ற 15 வயது மாணவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தான்.

இதன் மூலம், லண்டனில் இந்த ஆண்டு 16-வது குழந்தையாக Jalan Woods-Bell கொல்லப்பட்டுள்ளான், கடந்த ஆண்டு 15 பள்ளி மாணவர்கள் இதே போன்று வன்முறை சம்பவத்தால் உயிரிழந்தனர்,

லண்டனில் பள்ளிக்கு செல்லும் போது குத்தி கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்! பட்டப்பகலில் நடந்த பரிதாபம்: வெளியான புகைப்படம் | First Picture Of Boy 15 Stabbed To Death London

கொலை செய்யப்பட்டவுடன், இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவரை உடனடியாக பிடித்த பொலிசார், அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்துள்ளனர்.

உயிரிழந்த Jalan Woods-Bell-ன் குடும்ப உறுப்பினரான John Jackson, இங்கு என்ன நடக்கிறது, பிரித்தானியாவில் வன்முறை நடப்பதை நிறுத்த வேண்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், 14 முதல் 19 வயதுடைய மாணவர்களுக்கிடையேயான நடந்த சண்டையை தொடர்ந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் உடனடியாக வந்த போது, Jalan Woods-Bell கத்தி குத்து காயங்களுடன், சம்பவ இடத்தில் இறந்து கிடந்தார்.

பள்ளிக்கு செல்லும் போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அருகில் வசிக்கும் ஆசிரியர் Tia Rek-Williams(21) கூறுகையில், நான் மாணவன் கத்தியால் குத்தப்பட்ட போது பார்க்கவில்லை, சிறுவன் தரையில் கிடந்தான்.

லண்டனில் பள்ளிக்கு செல்லும் போது குத்தி கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்! பட்டப்பகலில் நடந்த பரிதாபம்: வெளியான புகைப்படம் | First Picture Of Boy 15 Stabbed To Death London

அப்போது அவன் கிடந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், அதன் பின் சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.

சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. இந்த சம்பவம் பகல் நேரத்தில் நடந்த, மிகவும் மோசமான சம்பவம் ஆகும் என்று கூறியுள்ளார். மேலும், இது குறித்து யாரேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படியும், அந்த தகவல் ரகசியமாக வைத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US