விஜயுடன் கூட்டணியில் இணைந்த முதல் அரசியல் கட்சி
தமிழக வெற்றி கழக கட்சி தொடங்கி அரசியல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சி ஒன்று அதன் கூட்டணியில் இணைந்துள்ளது.
கூட்டணி
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கி தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். அப்போது, கூட்டணி குறித்து வெளிப்படையான அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் என்று அறிவித்தார்.

பப்ஜி காதலால் சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்.., 6 யூடியூப் சேனல் நடத்தி லட்சக்கணக்கில் வருமானம்
மேலும், கொள்கை ரீதியாக பாஜகவை எதிரியாகவும், அரசியல் ரீதியாக திமுகவை தனது எதிரியாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சியின் அணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் என பல்வேறு பணிகளை தமிழக வெற்றி கழகம் மேற்கொண்டு வருகிறது.
தற்போது, விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு முதல் கட்சியாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுடன் கூட்டணியில் இணையும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "இஸ்லாமிய மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. இஸ்லாமிய மக்களின் பக்கம் நின்றவர் விஜய். தனது கட்சியில் இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரமும் கொடுத்துள்ளார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |