ஈரானின் முதல் ஜனாதிபதி பிரான்சில் மரணம்!
ஈரானின் முதல் ஜனாதிபதி Abolhassan Banisadr (வயது 88) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மரணமடைந்தார்.
குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், நீண்ட நட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த Abolhassan Banisadr பாரிஸில் உள்ள மருத்துவமனையில் இறந்தார் என தெரிவித்துள்ளனர்.
ஈரானில் முடியாட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் Banisadr வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.
1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு ஈரானின் முதல் ஜனாதிபதியாக Abolhassan Banisadr பொறுப்பேற்றார்.
ஈரானில் 1979 இஸ்லாமிய புரட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான Ruhollah Khomeini-யின் கூட்டாளியாக இருந்த Banisadr 1980 பிப்ரவரியில் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின் அவரது தாராளவாத கொள்கைகள் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் மீதான எதிர்ப்பிற்காக Banisadr மீது கடும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன.
1980 பிப்ரவரியில் ஜனாதிபதியாக பதவியேற்ற Banisadr முழுமையாக ஒரு வருடம் கூட அப்பதவியில் நீடிக்கவில்லை.
தனது கடைசி நேர்காணலில் Banisadr கூறியதாவது, ஈரானில் உள்ள எட்டு அரசியல் கட்சிகளை கண்டனம் செய்ய Ruhollah Khomeini-யின் கட்டளைக்கு இணங்க மறுத்தது மற்றும் ஈரான்-ஈராக் போரின்போது அமெரிக்கர்களுடன் ஒருஇரகசிய ஒப்பந்தத்தை ஒப்புதல் அளித்தது, அவரை பதவி நீக்கம் செய்யவும், அதைத்தொடர்ந்து பிரான்சுக்கு நாடு கடத்த வழிவகுத்தது என கூறினார்.