முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி! தென் ஆப்பிரிக்காவை சொற்ப ரன்களுக்கு சுருட்டிய பும்ரா-ஷமி
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 , Centurion மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுலின் சதத்தால் 327 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து முதலி இன்னிங்ஸில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு சுருண்டது.
4வது நாள் 2வது இன்னிங்ஸில் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
#TeamIndia WIN at Centurion ????#SAvIND pic.twitter.com/35KCyFM4za
— BCCI (@BCCI) December 30, 2021
மேலும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு 305 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
4வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.
தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 211 ரன்களும், இந்திய வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவை என்ற நிலையில் இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.
இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 191 ரன்களுக்கு சுருண்டு 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
DAY 5 - 1st Test | Highlights: Session 1 #SAvIND#BePartOfIt #SABCcricket pic.twitter.com/vMJV43z7ER
— SABC Sport (@SPORTATSABC) December 30, 2021
இந்திய தரப்பில் பந்து வீச்சில் பும்ரா, ஷமி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சிராஜ், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
1st Test RESULT
— SABC Sport (@SPORTATSABC) December 30, 2021
?? - 327 & 174
?? - 197 & 191
India won by 113 runs.#SAvsIND #BePartOfIt #SABCcricket pic.twitter.com/Quh1i9XM25
முதல் டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி 2022 ஜனவரி 3ம் திகதி ஜோகன்ஸ்பெர்க்கில் தொடங்கவிருக்கிறது.