பிரித்தானிய உயர் ஆணையராக பொறுப்பேற்றுள்ள முதல் அகதி
ஒரு காலத்தில் ஈரானிலிருந்து அகதியாக பிரித்தானியாவுக்கு வந்த ஒருவர், இன்று பிரித்தானிய உயர் ஆணையர் என்னும் பெரும் கௌரவத்தை எட்டிப் பிடித்துள்ளார்.
யார் இந்த நபர்?
அப்படி அகதியாக வந்து இன்று ஃபிஜி நாட்டுக்கான பிரித்தானியாவின் உயர் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அந்த நபரின் பெயர், கான்பார் ஹொசைன் போர் (44).
1987ஆம் ஆண்டு, தனக்கு ஆறு வயது இருக்கும்போது, ஈரான் நாட்டிலிருந்து தன் தாயைப் பின்தொடர்ந்து பிரித்தானியாவுக்கு அகதியாக வந்தவர் கான்பார்.
அவர் ஈரானில் பள்ளியில் கல்வி கற்ற காலத்தில், அந்த பள்ளிகளில், ‘பிரித்தானியா ஒழிக, இஸ்ரேல் ஒழிக, அமெரிக்கா ஒழிக’ என முழக்கமிடவைப்பார்களாம்.
இன்று பிரித்தானியாவில் Southamptonஇல் வாழ்கிறார் கான்பார். சட்டம் பயின்று சட்டத்தரணியாக சில காலம் பணி செய்து, பின் பிரித்தானிய உள்துறை அலுவலகத்தில் சட்ட ஆலோசகராக இணைந்த கான்பார், ஈராக்கில் பிரித்தானியா சார்பில் தூதரகப் பணி செய்துள்ளார்.
இன்று, அகதிப் பின்னணியிலிருந்து வந்து பிரித்தானிய உயர் ஆணையராகியிருக்கும் முதல் நபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் கான்பார்.
ஃபிஜி நாட்டின் பிரித்தானியாவுக்கான உயர் ஆணையராக பொறுப்பேற்றுள்ள கான்பார், பொதுவாக பிரித்தானியாவுக்கு அகதிகளாக, புகலிடக்கோரிக்கையாளர்களாக வருவோர், பிரித்தானியாவிலிருந்து பெற்றுக்கொண்டே இருப்பார்கள், அவர்கள் பிரித்தானியாவுக்கு போதுமான அளவில் எதையும் செய்வதில்லை என்னும் தோற்றம் உள்ளது.
என்னைப் பொருத்தவரை பிரித்தானியா எனக்கு இந்த வாய்ப்புகளையெல்லாம் அளித்துள்ளது. எனக்கு கொடுக்கப்பட்ட இந்த பொறுப்பை, நான் பிரித்தானியாவுக்கு திருப்பிக் கொடுப்பதற்கான வாய்ப்பாக நான் பார்க்கிறேன் என்கிறார் கான்பார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |