முதன்முறையாக 440 MP கேமரா கொண்ட மொபைல்! சாம்சங் அதிரடி
சாம்சங் நிறுவனமானது தனது மொபைல் வரலாற்றில் 440 MP கேமரா கொண்ட மொபைலை மார்க்கெட்டில் களமிறக்குகிறது.
கேமராவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு
உலகத்தில் செல்போன் கொண்டுவந்த காலத்தில் இருந்தே எந்த மொபைல் போனில் அதிகபட்ச மெகாபிக்சல் (Megapixels) இருக்கிறதோ அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் இளைஞர்கள் பலருக்கும் எண்ணம் இருக்கும்.
ஒரு மொபைல் போனில் எந்த அளவுக்கு கேமரா சிறப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மொபைல் போனை மக்கள் விரும்புவார்கள். ஆரம்பகட்டத்தில் 2 MP கேமரா மட்டுமே செல்போனில் இருந்தது. அதுவும் நோக்கியாவில் மட்டுமே எடுக்க முடியும். அப்போது, நோக்கியா போனுக்கான போட்டி அதிகளவில் இருந்தது.
அதன்பின்னர் தான் ஆன்டிராய்டு வந்தது. அப்போது தான் சாம்சங் தனது ஆட்டத்தை ஆரம்பித்து, தனது கேமரா திறனை 5 MP, 10 MP என உயர்த்தி மக்களை சாம்சங் பக்கத்தில் வர வைத்தது. அப்போது, சோனி (Sony), HTC, ஆப்பிள் (Apple) ஆகிய மொபைல் போன் இருந்தாலும் சாம்சங் தான் மக்களுக்கு குறைந்தவிலையில் கிடைத்தது.
ஆன்டிராய்டு வந்த புதிதில் மக்கள் சாம்சங் மொபைல் போனில் இருந்து தான் தொடங்கியிருப்பார்கள். இதனால், நோக்கியா தனது ராஜ்ஜியத்தை அமைக்க விண்டோஸை கையில் எடுத்தது.
அப்போது, நோக்கியா அறிமுகப்படுத்திய 'லுமியா 1020' மொபைல் போனில் உள்ள கேமரா 41 MP திறன் கொண்டது. இது, மற்ற நிறுவனங்களை அதிர்ச்சியை ஆழ்த்தியது. ஆனால், இந்த மொபைல் போனில், ஆண்ட்ராய்டுக்கு பதில், விண்டோஸ் பயன்படுத்தப்பட்டதால் பாதியில் நிறுத்தப்பட்டது.
440 MP கேமரா திறன் கொண்ட மொபைல் போன்
இந்நிலையில், உலகில் முதன்முறையாக செல்போன் வரலாற்றிலே சாம்சங் நிறுவனமானது 440 MP கேமரா திறன் கொண்ட மொபைல் போனை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
ஏற்கனவே, 200 MP கேமரா திறன் கொண்ட Samsung Galaxy S23 Ultra 5G மொபைல் போன் சந்தையில் இருக்கும் நேரத்தில் இதனை முறியடிக்க 440 MP கேமரா மொபைல் போன் வரவிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இந்த மொபைல் போன் விற்பனைக்கு வருவதற்கு முன் 320MP கேமரா திறன் கொண்ட Galaxy S26 Ultra மொபைல் போன் சந்தைக்கு வரும் என்ற தகவலும் வருகின்றன.
எப்படி இருந்தாலும், சோனி, HTC, ஆப்பிள் நிறுவனங்கள் தனது மொபைல் போனில் கேமரா திறனை அதிகப்படுத்த வேண்டியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |