3-வது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பழங்குடியின IAS அதிகாரி
இந்த மாநிலத்திலிருந்து மூன்றாவது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பழங்குடியின IAS அதிகாரி இவர் தான்.
முதல் பழங்குடியின IAS அதிகாரி
கேரளா, வயநாடு மாவட்டத்தில் உள்ள குறிச்சியா பழங்குடி சமூகத்தில் பிறந்தவர் ஸ்ரீதன்யா. இவர் இருக்கும் இடத்தில் கணிசமான பழங்குடி மக்கள் தொகை இருந்தாலும், பின்தங்கிய பகுதி தான் அவர் இருக்கும் இடம்.
அவரது பெற்றோர் சுரேஷ் மற்றும் கமலா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) கீழ் தினசரி கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து, உள்ளூர் சந்தையில் வில் மற்றும் அம்புகளை விற்று வாழ்க்கையை நடத்தினர்.
ஸ்ரீதன்யா அரசுப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்து கோழிக்கோட்டின் தேவகிரியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் விலங்கியல் பட்டம் பெற்றார். பின்னர் காலிகட் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு விலங்கியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
2016 ஆம் ஆண்டு வயநாடு மாவட்ட ஆட்சியராக இருந்த சீரம் சாம்பசிவ ராவை சந்தித்தபோது ஸ்ரீதன்யாவுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வில் ஆர்வம் வந்தது.
பின்பு, UPSC தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார். அந்த நேரத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் தனது இரண்டு பை புத்தகங்களை இழந்தார். ஆனாலும், 2018 ஆம் ஆண்டு UPSC முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார் ஸ்ரீதன்யா.
பின்னர் யுபிஎஸ்சி நேர்காணலுக்கு டெல்லிக்குச் செல்ல அவருடைய நண்பர்கள் அவருக்கு ரூ.40,000 கடனாகக் கொடுத்தனர்.
ஸ்ரீதன்யா 2018 யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 410வது இடத்தைப் பிடித்து கேரளாவின் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்திய நிர்வாக சேவையின் கேரளப் பிரிவில் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கோழிக்கோட்டில் உதவி கலெக்டராக தனது பணியைத் தொடங்கினார். தற்போது, கேரள அரசின் பதிவுத் துறையில் பதிவுத் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பணியாற்றுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |