ரூவாண்டாவிற்கான முதல் விமானம் இறுதி நிமிடத்தில் ரத்து: பிரித்தானிய அரசுக்கு தொடரும் சட்டசிக்கல்
பிரித்தானியாவில் இருந்து ரூவாண்டாவிற்கு நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் முதல் விமானம் கடைசி நிமிடத்தில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களால் பிரான்ஸ் நாட்டில் இருந்து மிகச் சிறிய படகுகளில் ஆங்கில கால்வாய் வழியாக அபத்தான முறையில் நடத்தப்படும் புலம்பெயர்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய அரசு, புகலிடக் கோரிக்கையாளர்களை ரூவாண்டா நாட்டிற்கு அனுப்பும் செயல்திட்டத்தை அறிவித்தது.
பிரித்தானிய அரசின் இந்த திட்டமானது மிகவும் கொடுரமானது என குற்றம் சாட்டிய சில மனித உரிமை அமைப்பு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அமைப்பு, அரசின் திட்டத்திற்கு எதிராக அவசர கால தடை மற்றும் இடைகால தடைகளை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
Photo: Reuters
இந்த வழக்கானது பிரித்தானியாவின் உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் இரண்டிலும் தோல்வியடைந்ததை அடுத்து, கிழக்கு ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் முதல் விமானம் செவ்வாய் கிழமையான இன்று புறப்பட தயாரானது.
இந்தநிலையில், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தலையீட்டால் பிரித்தானியாவில் இருந்து ரூவாண்டாவிற்கு பறக்கவிருந்த கடத்தல் விமானம் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Photo: PA
130 பேர் வரை பயணிக்க பிரித்தானிய அரசு முன்னதாக திட்டமிட்டு இருந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவால் அதன் அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் விமானத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
ரூவாண்டாவிற்கு நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கைகளை உள்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்ததற்கு மத்தியில், இன்று பிற்பகுதியில் ஈராக் கைதி ஒருவர் நாடுகடத்தப்படுவதை தடுத்து நிறுத்த ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Photo: PA
கூடுதல் செய்திகளுக்கு: மாதக்கணக்கில் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை: தப்பிய பெண் காவல்துறையிடம் புகார்!
அத்துடன் முடிவு வழங்கப்பட்ட மூன்று வாரங்கள் வரை விண்ணப்பதாரரை ரூவாண்டவிற்கு அனுப்பகூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.