அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: முதல் முடிவுகள் வெளியாகின
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், சிறிய நகரம் ஒன்றின் மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்க, அங்கு, வாக்கு எண்ணிக்கையே வெளியாகியாயிற்று.
முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகின
அமெரிக்காவின் New Hampshire மாகாணத்திலுள்ள Dixville Notch என்னும் நகரில் தேர்தல் நடைபெற்று முடிந்தாயிற்று, வாக்கு எண்ணிக்கையும் வெளியாகிவிட்டது.
ஆம், Dixville Notch நகரின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையே ஆறுதான். அந்த ஆறு பேரும் தேர்தலில் வாக்களித்துவிட்டார்கள்.
வாக்கு எண்ணிக்கையும் முடிந்துவிட்டது. Dixville Notch நகரில் கமலா ஹரிஸுக்கு மூன்று வாக்குகளும், ட்ரம்புக்கு மூன்று வாக்குகளும் கிடைத்துள்ளன.
விடயம் என்னவென்றால், இந்த முடிவுகள் அமெரிக்க தேர்தல் முடிவுகளின் முன்னோடி என கருதப்படுகிறது.
ஏற்கனவே சமீபத்திய கருத்துக்கணிப்புகள், ட்ரம்புக்கும் கமலாவுக்கும் நாடு முழுவதும் வாக்குகள் எண்ணிக்கை சிறிய அளவிலான வித்தியாசத்தில்தான் இருக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |