பிரித்தானியாவில் முதல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றி: பலருக்கும் ஒரு நல்ல செய்தி
பிரித்தானியாவில், முதன்முறையாக பெண் ஒருவருக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
தங்கைக்கு கர்ப்பப்பை கொடுத்த அக்கா
இங்கிலாந்தில் வாழும் பெண் ஒருவர் அபூர்வ நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரால் தாயாக முடியாத நிலைமை இருந்தது. அதாவது, அவரது கருப்பை குழந்தையை சுமக்கும் அளவில் இல்லை.
குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருந்தும், இந்த பிரச்சினை காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் வாடியுள்ளார் அந்த 34 வயதுப் பெண்.
இந்நிலையில், அவரது அக்கா, அவருக்கு 40 வயதாகிறது, அவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால், தனது கர்ப்பபையை தன் சகோதரிக்கு தானமாக வழங்க முன்வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் உட்பட 20 பேர் கொண்ட குழு ஒன்று, 17 மணி நேரம் நிகழ்ந்த அறுவை சிகிச்சை ஒன்றில், அக்காவின் கருப்பையை தங்கைக்கு பொருத்தியுள்ளனர்.
கர்ப்பப்பை பொருத்தப்பட்டு இரண்டு வாரங்களில் தங்கைக்கு மாதவிடாயும் வந்துவிட்டது. அதாவது, அவரது இனப்பெருக்க உறுப்புகள், தானமாக பெறப்பட்ட கர்ப்பப்பை வரை, சரியாக இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அக்காவும் தங்கையும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ள நிலையில், தான் ஒன்றல்ல, இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார் அந்த 34 வயதுப் பெண்.
BBC
பலருக்கு ஒரு நல்ல செய்தி
இந்த அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல, பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தியாகும். ஏனென்றால், கர்ப்பப்பை புற்றுநோய் முதலான காரணங்களால் இளம் வயதிலேயே கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண்களும், இந்த அறுவை சிகிச்சை மூலம், கர்ப்பப்பை தானமாக பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
அப்படி, குழந்தை பெற்றுக்கொள்ள ஆவலாக காத்திருப்பவர்களில் 31 வயது லிடியாவும் ( Lydia Brain) ஒருவர். கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக லிடியாவின் கர்ப்பப்பை அகற்றப்பட்டுவிட்டது.
bbc
அந்த 34 வயதுப் பெண்ணுக்கு நடந்த கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதை அறிந்து தான் மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கும் லிடியா, தனது முறைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |