பிரித்தானியாவிலிருந்து வெளிநாடொன்றிற்கு நாடுகடத்தப்படும் முதல் பெண்
வெளிநாடொன்றில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணொருவர் பிரித்தானியாவுக்குத் தப்பி வந்த நிலையில், அவரை நாடுகடத்த பிரித்தானியா முடிவு செய்துள்ளது.
பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் முதல் பெண்
2019ஆம் ஆண்டு, அல்பேனியா நாட்டவரான லைரீ டெலிஷி (Lirie Delishi, 25) என்னும் பெண், அந்நாட்டின் தலைநகரான Tiranaவிலிருந்து ரோமுக்கு போலி ரொமேனியா பாஸ்போர்ட் மூலம் பயணிக்க முயன்றபோது சிக்கினார்.

பின்னர் அவர் பிரித்தானியாவுக்கு தப்பிவந்து தன் கணவர் பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் நிலையில், அல்பேனியா அதிகாரிகள் அவரை திருப்பி அழைத்துக்கொள்ள முயற்சி செய்துவருகிறார்கள்.
இந்நிலையில், அவரை நாடுகடத்த பிரித்தானியா முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையிலும், அவரது கணவரும் மூன்று பிள்ளைகளும் அவரைப் பிரிந்து பிரித்தானியாவில் வாழும் நிலை உருவாகியிருந்தாலும், சர்வதேச நாடுகடத்தல் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் பிரித்தானியாவுக்கு உள்ளது என வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா குற்றம் செய்தவர்கள் தப்பி வந்து வாழும் பாதுகாப்பான நாடு என குற்றவாளிகள் எண்ணிவிடக்கூடாது என்பதாலேயே லைரீ திருப்பி அனுப்பப்படுகிறார் என்றும் கூறியுள்ளார் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி.
ஆக, லைரீ அல்பேனியா நாட்டுக்கு நாடுகடத்தப்பட உள்ளார். அங்கு அவர் நான்கு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க இருக்கிறார்.
இப்படி பிரித்தானியாவிலிருந்து அல்பேனியாவுக்கு நாடுகடத்தப்படும் முதல் பெண் லைரீ என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |