நாவூறும் சுவையில் அருமையான மீன் பிரியாணி: எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Yashini Jan 18, 2024 09:00 AM GMT
Yashini

Yashini

in உணவு
Report

அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணி பிடிக்காத ஒருவரை கூட பார்ப்பது அரிதான விஷயம்.

காலை, மதியம், இரவு என மூன்று நேரம் பிரியாணி கொடுத்தாலும் நம்மில் பலர் சலிக்காமல் சாப்பிடுவோம்.

அந்தவகையில், வித்யாசமான சுவையில், சுவையான மீன் பிரியாணி எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

நாவூறும் சுவையில் அருமையான மீன் பிரியாணி: எப்படி செய்வது? | Fish Briyani Recipe In Tamil

தேவையான பொருட்கள்

  • வறுத்து அரைக்க 
  • கொத்தமல்லி- ½ ஸ்பூன்
  • சீரகம்- ½ ஸ்பூன்
  • சோம்பு- ½ ஸ்பூன்
  • மிளகு- ½ ஸ்பூன்
  • கிராம்பு- 3
  • நட்சத்திர சோம்பு- 1
  • ஏலக்காய்- 3
  • பட்டை- 1 துண்டு 

மீன் ஊறவைக்க

  • முள் இல்லாத மீன்- ½ kg
  • தயிர்- ½ கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு 

நாவூறும் சுவையில் இறால் பிரியாணி: எப்படி செய்வது?

நாவூறும் சுவையில் இறால் பிரியாணி: எப்படி செய்வது?

பிரியாணி செய்வதற்கு

  • பாசுமதி அரிசி- 2 கப்
  • எண்ணெய்- தேவையான அளவு
  • பிரியாணி இலை- 2
  • கருப்பு சீரகம்- ½ ஸ்பூன்
  • நெய்- 3 ஸ்பூன்
  • புதினா இலை- 1 கைப்பிடி
  • கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி
  • பொரித்த வெங்காயம்- 1 கைப்பிடி
  • பால்- 5 ஸ்பூன்
  • குங்குமப்பூ- 3 இதழ் 

செய்முறை

முதலில் ஒரு வாணலில் கொத்தமல்லி, சீரகம், சோம்பு, மிளகு, கிராம்பு, நட்சத்திர சோம்பு, ஏலக்காய், பட்டை இவற்றை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் இதனை நன்கு ஆறவைத்து பொடியாக நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

நாவூறும் சுவையில் அருமையான மீன் பிரியாணி: எப்படி செய்வது? | Fish Briyani Recipe In Tamil

அடுத்து மீன் ஊறவைக்க ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா சேர்த்து கலந்து அதனுடன் முள் இல்லாத மீன் சேர்த்து 20 நிமிடங்கள் நன்கு ஊறவைக்கவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, கருஞ்சீரகம், ஏலக்காய் சேர்த்து வதக்கி பின் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை சேர்த்து 70% வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் ஊறவைத்த மீன் அதன் மாசாலாவுடன் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.

நாவூறும் சுவையில் அருமையான மீன் பிரியாணி: எப்படி செய்வது? | Fish Briyani Recipe In Tamil  

மீன் நன்கு வெந்து வந்ததும் இதன் மேல் கொத்தமல்லி இலை, புதினா இலை, பொரித்த வெங்காயம் சேர்த்து அதன் மேல் வேகவைத்த பாசுமதி அரிசியை பாதி போட்டு பின் கொத்தமல்லி இலை, புதினா இலை மற்றும் பொரித்த வெங்காயம் சேர்க்கவும்.

அதன் மேல் மீதி உள்ள பாசுமதி அரிசியையும் சேர்த்து பின் கொத்தமல்லி இலை, புதினா இலை மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்து அதில் நெய் மற்றும் பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 20 நிமிடம் வைத்து தம் போட்டு இறக்கினால் சுவையான மீன் பிரியாணி தயார்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US