சுவிஸ் நதியில் செத்து மிதந்த மீன்கள்... நதிக்குள் தண்ணீரை பாய்ச்சும் தீயணைப்பு வீரர்கள்: பின்னணி
ஜெனீவா தீயணைப்பு வீரர்கள், மின் மோட்டார் மூலம் நதி ஒன்றிற்குள் தண்ணீரை பம்ப் செய்து வருகிறார்கள். Dardagny என்ற இடத்திலுள்ள நதி ஒன்றுக்குள் தவறுதலாக சர்க்கரை ஆலைக் கழிவு கலந்துவிட்டது.
அதனால், மக்களுக்கு பிரச்சினை எதுவும் ஏற்படாது என்றாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதால் நதியிலுள்ள மீன்கள் முதலான உயிரினங்கள் பாதிக்கப்படும். அதன் காரணமாகவே நதியில் திடீரென மீன்கள் செத்து மிதக்கவும் தொடங்கியுள்ளன.
ஆகவே, நதிக்குள் ஆக்சிஜனின் அளவை அதிகரிப்பதற்காக, புதிதாக தண்ணீரை கொட்டி வருகிறார்கள் தீயணைப்பு வீரர்கள்.
புதிய நீர் சேர்க்கப்படுவதால், நதியிலுள்ள ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கும் என்பதால் நதியிலுள்ள மீன்கள் முதலான உயிரினங்கள் காப்பாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.