நாவூறும் சுவையில் மொறுமொறு Fish Fingers.., எப்படி செய்வது?
Fish Fingers Recipe- மீன் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
மீன் உண்பது இதயம், மூளை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இதில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில், சத்து நிறைந்த மீன்களில் சுவையான பிஷ் பிங்கர்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வஞ்சரம் மீன் - ½kg
- எலுமிச்சை - ½
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
- முட்டை - 1
- மைதா - 3 ஸ்பூன்
- பிரட் தூள் - 1 கப்
செய்முறை
முதலில் மீன் துண்டுகளை நீளமாக நறுக்கி இதில் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
பின் அடுத்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, மீன் துண்டுகளுடன் ஊற்றவும்.

அடுத்து இதனை நன்கு கலந்த பின், மைதா மாவு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
இதற்கடுத்து 30 நிமிடம் கழித்து ஊறிய மீன் துண்டுகளை பிரெட் தூளில் போட்டு பிரட்டவும்.
இறுதியாக ஒரு வாணலில் எண்ணையை சூடு செய்து, மீன் துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் சுவையான பிஷ் பிங்கர்ஸ் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |