நாவூறும் சுவையில் பட்டினம்பாக்கம் மீன் வறுவல்.., இலகுவாக செய்வது எப்படி?
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று மீன். மீன் பிடிக்காத ஒருவரை கூட பார்ப்பது அரிதான விஷயம்.
காலை, மதியம், இரவு என மூன்று நேரம் மீன் கொடுத்தாலும் நம்மில் பலர் சலிக்காமல் சாப்பிடுவோம்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் பட்டினப்பாக்கம் மீன் வறுவல் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மீன்- 2 துண்டு
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மல்லி- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- காஸ்மீரி மிளகாய்- 3
- கடலை மாவு- 1 ஸ்பூன்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் கழுவிய மீன் துண்டுகளில் மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கலந்து 1 மணி நேரம் அப்படியே மூடி போட்டு வைக்கவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, காஸ்மீரி மிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஊறவைத்த மீன் துண்டுகளை அரைத்து மசாலா பொடியுடன் சேர்த்து பிரட்டிவைக்கவும்.
இறுதியாக வாணலில் எண்ணெய் சேர்த்து மீனை பொறித்து எடுத்தால் சுவையான பட்டினப்பாக்கம் மீன் வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |