நாவூறும் சுவையில் மீன் ஊறுகாய்.., வீட்டிலேயே செய்வது எப்படி?
வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் இந்த சுவையான மீன் ஊறுகாயை விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் மீன் ஊறுகாயை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மீன்- 1 உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- கடுகு- 2 ஸ்பூன்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 10 பல்
- காய்ந்தமிளகாய்- 2
- தக்காளி- 2
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- காஸ்மீரி மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் மீன் துண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கி கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் கடுகு மற்றும் வெந்தயத்தை வறுத்து ஆறவைத்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த மீன் துண்டுகளை சேர்த்து பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், அரைத்த தக்காளி சாறு சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஸ்மீரி மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
நன்கு கெட்டியாகி வந்ததும் இதில் பொரித்த மீன் துண்டு, அரைத்த கடுகு, வெந்தய பொடி மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மீன் ஊறுகாய் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |