மீன் சாப்பிடும் போது தொண்டையில் முள் சிக்கிக்கிட்டால் இப்படி பண்ணுங்க!
பொதுவாகவே நம்மில் பலருக்கும் மீன் சாப்பிடும் போது தொண்டையில் மீன் முள் சிக்கிக்கொள்வது வழக்கம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எதிர்க்கொள்ளும் ஒரு பிரச்சினையாக இது காணப்படுகின்றது.
மீன் முள்ளானது தொண்டையில் சிக்கிவிட்டால் கழுத்தில் வலி ஏற்படும். இருமலில் ரத்தம் வரும். மற்றும் தொண்டையில் அரிப்பு, வலி ஏற்படும். சிலருக்கு மீன் முள் மாட்டி அறுவை சிகிச்சை செய்கின்ற நிலையும் ஏற்படுகின்றது.
மீன் சாப்பிடுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதாக இருகின்றது. ஆனால் தற்செயலாக தொண்டையில் சிக்கல் ஏற்படுகின்றது. அதை எப்படி வீட்டில் இருந்தப்படியே சிகிச்சை அழிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
முள் சிக்கிய பிறகு ஏற்படும் அறிகுறிகள்
-
கழுத்தில் சுருக் சுருக்கென்று வலி
-
இருமல்
- உணவை விழுங்க முடியாது
-
இருமலில் இரத்தம் வருதல்
-
தொண்டையில் அசெளகரியம் தென்படும்
- தொண்டையில் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டு இருக்கும்
இயற்கையான வழியில் எப்படி வெளியேற்றலாம்?
-
ஒரு பெரிய துண்டு வாழைப்பழத்தை கடித்து தொண்டையில் வைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழம் உமிழ்நீருடன் தொண்டையில் மாட்டிக் கொண்ட மீன் முள்ளையும் சேர்த்து வயிற்றுக்குள் சென்றுவிடும். பின் எளிதாக செரிமானம் ஆகிவிடும்.
- சாதத்தை உருட்டி முழங்குங்கள். சாதம் தொண்டைக்குள் இறங்கும் போது மீன் முள்ளையும் வயிற்றுக்குள் தள்ளி விடும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு குடித்தால் மீன் முள் இறங்கிவிடும்.
- 1-2 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை விழுங்கினால் வழுவழுப்பு தன்மையுடன் மீன் முள் வழுக்கி வயிற்றில் சேர்ந்து விடும்.
- பாண் பெரிய துண்டும் தண்ணீரை சேர்த்து வேகமாக குடித்தால் இலகுவான முறையில் மீன் முள்ளை வயிற்றுக்கு தள்ளி விடும்.
- 2 ஸ்பூன் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து 1 ஸ்பூன் மட்டும் குடித்தால் சிக்கிக்கொண்ட முள் இறங்கிவிடும்.
மீன் முள் தொண்டையில் இருக்கும் போது செய்யக் கூடாதவை
-
மீன் முள்ளை எடுக்க கம்பி, ஸ்பூன் என்று எந்தவொரு பொருளையும் தொண்டைக்குள் குத்தக்கூடாது.
- தொண்டை யை அழுத்தி பிடிப்பது, அழுத்துவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
மேலும் இந்த முறைகளின் அடிப்படையில் சிக்கிய மீன் முள்ளை எடுக்க முடியவில்லை என்றால் உடனே வைத்தியரிடம் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |