மீன்பிடி விவகாரம் பிரித்தானியாவின் நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை! மக்ரோன் எச்சரிக்கை
மீன்பிடி உரிமைகள் விவகாரம் பிரித்தானியாவின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் எச்சரித்துள்ளார்.
இவ்வாறு எச்சரித்ததன் மூலம் மாரோன் பிரித்தானியா உடனான பதட்டத்தை அதிகரித்துள்ளார்.
ரோமில் G20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பேசிய மாக்ரோன், எந்த தவறும் செய்யாதீர்கள், இது ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் அனைத்து நட்டு நாடுகளுக்கும் பொருந்தும்.
ஏனென்றால், நீங்கள் ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல ஆண்டுகள் செலவிட்டு, பின்னர் ஒரு சில மாதங்களுக்கு பிறகு உங்களுக்கு மிகவும் பொருத்தமான அம்சங்கள் என முடிவு செய்யப்பட்டதற்கு எதிராக நீங்கள் செயல்படுவது, உங்கள் நம்பகத்தன்மைக்கு பெரிய அடையாளமாக இருக்காது என மாக்ரோன் கூறினார்.
பிரெக்சிட் கடமைகளிலிருந்து பிரித்தானியா பின்வாங்குவது நம்பகத்தன்மையின் பெரிய அடையாளமாக இருக்காது என ஏற்கனவே மாக்ரோன் கூறியுள்ளார்.
இதனிடையே, பிரித்தானியா அதன் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய ஒன்றியம்-பிரித்தானியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மீறப்பட்டிருக்கலாம் என்று தான் அஞ்சுவதாக கூறினார்.