தோல் புற்றுநோய் பாதிப்பு.,பிறந்தநாளை கொண்டாடிய பின் இறந்த அமெரிக்க பிரபலம்! சோகத்தில் ரசிகர்கள்
அமெரிக்காவில் உடற்பயிற்சி பிரபலம் தனது 76வது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாள் காலமானார்.
Fitness Guru
லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸைச் சேர்ந்தவர் ரிச்சர்டு சிம்மோன்ஸ் (Richard Simmons). தொலைக்காட்சி பிரபலமான இவர், ஏராளமான உடற்பயிற்சி கூடங்களைத் திறந்து வீடியோக்கள் மூலம் கவனம் ஈர்த்தார்.
இதனால் 'Fitness Guru' என்று அழைக்கப்படுகிறார். மேலும் Never Say Diet உட்பட 9 புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் சிம்மோன்ஸ் தனது 76வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தோல் புற்றுநோய்
அவரது பதிவில், 'நன்றி...என் பிறந்தநாளைப் பற்றி இவ்வளவு செய்திகளை என் வாழ்நாளில் நான் பெற்றதில்லை! நான் இங்கே அமர்ந்து மின்னஞ்சல் எழுதுகிறேன். மிகவும் அழகான வெள்ளிக்கிழமையை அனுபவியுங்கள். அன்புடன் ரிச்சர்டு' என கூறியிருந்தார்.
ஆனால், மறுநாளே அவர் இயற்கையான காரணங்களால் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தனது தோல் புற்றுநோய் இருப்பதை கண்டறிந்ததாக சிம்மோன்ஸ் வெளிப்படுத்தியிருந்தார்.
ரிச்சர்டு சிம்மோன்ஸின் திடீர் மறைவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |