39 வயதிலும் இளைஞர்... மார்க் ஜுக்கர்பெர்க்கின் பிட்னெஸ் ரகசியம் இது தான்!
பேஸ்புக் (மெட்டா) நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது fitness குறித்த ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.
ஜுக்கர்பெர்க்கின் பிட்னெஸ்
மிக இளம் வயதில் பில்லியனராக உருவெடுத்தவர் மார்க் ஜுக்கர்பெர்க். இவர் தொடங்கிய பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்போது மெட்டா எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.
சமீபத்தில் ட்விட்டருக்கு போட்டியாக திரெட்ஸ்(Threads) எனும் சமூக வலைத்தளத்தை மார்க் அறிமுகப்படுத்தினார். அப்போது அவரது உடலை பராமரிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜுக்கர்பெர்க், தனது அன்றாட வாழ்க்கைமுறை எப்படி இயங்குகிறது என தெரிவித்தார்.
அன்றாட வாழ்க்கை முறை
காலையில் எழுந்ததும் மனதை தெளிவாக்க Mixed Martial Arts போன்ற விளையாட்டுகளில் ஜுக்கர்பெர்க் கவனம் செலுத்துவாராம்.
தினமும் 7 முதல் 8 மணிநேரம் தவறாமல் உறங்குவாராம்.
அதிக புரதம், குறைவான சர்க்கரை மற்றும் மிகவும் குறைந்த அளவு ஆல்கஹால் போன்ற உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வாராம்.
காபி அல்லது தேநீரை அறவே தவிர்ப்பாராம். இதற்கு காரணம் காஃபைனை அவர் எடுத்துக் கொள்ள மாட்டாராம்.
அத்துடன் சோடா, புத்துணர்ச்சி பானங்கள் மற்றும் சில வகையான மருந்துகளிலும் காஃபைன் இருப்பதால், அவற்றையும் மார்க் எடுத்துக்கொள்வதில்லை.
dpa/Paul Zinken
ஒருநாளைக்கு 1000 மி.கி காபியை எடுத்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை, தூக்கமின்மை, பதற்றம், உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 39 வயதாகும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பிட்னெஸ் ரகசியம் இதுதான் என்பது அவரது நேர்காணல் மூலம் தெளிவாகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |