ஒரே குடும்பத்தில் 5 சிறார்கள் துஸ்பிரயோகம்: மைக்கேல் ஜாக்சன் அலுவலகம் மீது வழக்கு
கலிபோர்னியாவை சேர்ந்த 5 சகோதரர்கள் துள்ளிசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் எஸ்டேட் மீது 160 மில்லியன் பவுண்டுகள் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
காசியோ குடும்பம்
தொடர்புடைய ஐந்து சகோதரர்களும் மைக்கேல் ஜாக்சனால் மூளைச்சலவை செய்யப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக, 1980களில் தொடங்கி குறைந்தது 2009 வரையில் அந்தரங்கத் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காசியோ குடும்பத்தை தனது சொந்த குடும்பமாகவே மைக்கேல் ஜாக்சன் அடையாளப்படுத்தி வந்துள்ளார். 1984ல் நியூயார்க்கின் ஹெல்ம்ஸ்லி அரண்மனையில் டொமினிக் என்பவர் பொது மேலாளராகப் பணியாற்றிய போது ஜாக்சனுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அவரது பிள்ளைகளை தமக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஜாக்சனின் கோரிக்கையை டொமினிக் மறுக்கவில்லை. அப்போது அவருக்கு மூன்று மற்றும் ஐந்து வயதில் இரு பிள்ளைகள் இருந்தனர். பின்னர் மூன்று பிள்ளைகள் என ஐவருக்கு டொமினிக் தந்தையானார்.
இந்த காலகட்டத்தில் அந்த குடும்பத்துடன் ஜாக்சன் மிக நெருக்கமான உறவை உருவாக்கியிருந்தார். டொமினிக்கின் பிள்ளைகள் ஐவரும் பலமுறை கலிபோர்னியாவில் உள்ள ஜாக்சனின் நெவர்லேண்ட் பண்ணையில் தங்கியுள்ளனர்.
துஸ்பிரயோகம்
டொமினிக்கின் மூத்த மகன் பிராங்க் 18 வயது நிரம்பியதும் ஜாக்சனின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார். இந்த நிலையிலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
அதில், டொமினிக்கின் ஐந்து பிள்ளைகளும் தனித்தனியாக தங்களை மூளைச்சலவை செய்து துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர். குற்றச்சாட்டின் தீவிரத்தன்மை காரணமாக, இந்த வழக்கு ஜாக்சன் எஸ்டேட்டிற்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கப் போகிறது என்றே கூறுகின்றனர்.
2009ல் ஜாக்சன் மரணமடைந்ததன் பின்னர் பல்வேறு வழிகளில் அவரது எஸ்டேட் சுமார் 2.5 பில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டியுள்ளது. தற்போது காசியோ சகோதரர்கள் 160 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கேட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |