இந்த 5 சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது உணவு பொருட்களுக்கு நன்றாகவே பொருந்தும். எவ்வளவு சுவையான மற்றும் சத்து வாய்ந்த உணவுகளையும் ஓரளவுக்கு மேல் சாப்பிடக்கூடாது.
சில குறிப்பிட்ட உணவுப் பொருள்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காண்போம்.
பச்சரிசி
உணவில் பச்சரிசியை அதிகமாக எடுத்துக் கொண்டால் ரத்தசோகை உண்டாகும், அதனால் குறைந்த அளவில் பச்சரியை சாப்பிடுவதே நல்லது.
வெல்லம்
வெல்லத்தை அளவுக்கு அதிகமாக விரும்பிச் சாப்பிடுபவராக இருந்தால், அது இரும்புச் சத்தை அதிகரிக்கச் செய்யும். அதேசமயம் அது குறிப்பிட்ட அளவைத் தாண்டுகிற பொழுது அஜீரணக் கோளாறை உண்டாக்கும்.
எண்ணையில் செய்யப்படும் பலகாரங்கள்
எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக சாப்பிடுகிறவராக இருந்தால் உங்களுடைய வயிற்றில் வலி அதிகமாகும்.
தேங்காய்
தேங்காய் சிலர் ஆரோக்கியம் என்பார்கள். சிலர் நெஞ்சைக் கரிக்கும் என்பார்கள். இரண்டுமே உண்மை தான். தேங்காயை அளவோடு சாப்பிட்டால் அது ஆரோக்கியம். அளவுக்கு அதிகமானால் சளி, பித்தம், வறட்டு இருமல், நெஞ்சு கரித்தல் ஆகியவை உண்டாகும்.
முருங்கைக்காய்
முருங்கையில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. அதுவே முற்றிவிட்டால் அதன் விதையை மட்டும் பிரித்தெடுத்து வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, பாலில் கலந்து குடிக்க உடல் வலுப்பெறும். ஆனால் முற்றிய முருங்கை முருங்கையை சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும்.