பிரான்சில் இன்னமும் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி பெறவில்லை: எத்தனை பேர்? ஏன்?
பிரான்சில் இன்னமும் ஐந்து மில்லியன் மக்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், அவர்கள் எல்லோருமே தடுப்பூசிக்கு எதிரான கொள்கை கொண்ட ‘anti-vaxxers’ அல்ல என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
சமீபத்தில்தான் பிரான்ஸ் ஜனாதிபதி கொரோனா தடுப்பூசி பெறாதவர்களை எரிச்சலூட்டி தடுப்பூசி பெறச் செய்ய இருப்பதாக தெரிவிக்கும்போது, வாய் தவறி விட்டுவிட்ட ஒரு மோசமான வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இப்படிப்பட்ட சூழலில்தான், தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொளாத அனைவருமே தடுப்பூசிக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் அல்ல என்று கூறியுள்ளது.
பிரான்ஸ், உலகில் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், இன்னமும் பிரான்சில் ஐந்து மில்லியன்பேர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை.
இந்த தடுப்பூசி பெறாதவர்கள் யார், அவர்கள் ஏன் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கீழ்க்கண்ட உண்மைகள் தெரியவந்துள்ளன.
பிரான்ஸ் மக்கள்தொகையில் 10.5 சதவிகிதத்தினர், தாங்கள் கொரோனா இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என்றும், பெற்றுக்கொள்ளும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
பிரான்ஸ் மக்கள்தொகையில் சுமார் 2 முதல் 4 சதவிகிதத்தினர் (1 முதல் 2 மில்லியன் பேர்) தடுப்பூசிக்கு எதிரான கொள்கை கொண்டுள்ளார்கள்.
அது ஒரு புதிய தடுப்பூசி என்பதும், அரசு மீதான நம்பிக்கையின்மையும்தான் அதற்குக் காரணங்களாகும்.
குறிப்பாக, பெண்கள், இளைஞர்கள், வலது சாரியினருடன் நெருக்கமானவர்கள், தீவிர வலது சாரிக் கொள்கை கொண்டவர்கள் மற்றும் எந்த கட்சியுடனும் நெருக்கம் காட்டாதவர்கள் ஆகியோர்ருக்குதான் இந்த தடுப்பூசி எதிர்ப்பு எண்ணம் காணப்படுகிறது.
மூன்றாவது குழுவினர், தடுப்பூசி குறித்து தெளிவான எண்ணமோ, அல்லது தடுப்பூசி முழுமையான எதிர்ப்போ இல்லாதவர்கள்.
ஆக, கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத எல்லோருமே தடுப்பூசியை எதிர்க்கும் கொள்கை கொண்டவர்கள் அல்ல என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான Dr Jeremy Wardஎன்பவர்.
அத்துடன், எல்லோருடைய கருத்தையும் புரிந்துகொள்வதும் கடினமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலர், தடுப்பூசி மையங்களுக்கு எளிதில் செல்ல வசதி இல்லாததாலும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என்கிறார் அவர்.