இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து இந்திய வம்சாவளியினர் பலி: வெளிநாடொன்றில் கடும் சோகத்தை உருவாக்கியுள்ள விபத்து
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நிகழ்ந்த அசாதாரண விபத்தொன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து இந்திய வம்சாவளியினர் பலியான சம்பவம் இந்திய சமூகத்தினரிடையே கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
ஜாலியாக உணவருந்தச் சென்ற குடும்பங்கள்
Pratibha Sharma (44) என்னும் பெண்ணின் குடும்பத்தினர், தங்கள் குடும்ப நண்பர்களான Vivek Bhatia (38) குடும்பத்தினருடன் விடுமுறையை ஜாலியாக செலவிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
dailymail
ஞாயிற்றுக்கிழமை மாலை, இரண்டு குடும்பங்களும் மெல்போர்னிலுள்ள உணவகம் ஒன்றில் வெளியே அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று, தடுப்புச்சுவரையும் தாண்டி, உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்துள்ளது.
இந்த பயங்கர சம்பவத்தில், Pratibha Sharma, அவரது மகளான Anvi (9), கணவர் Jatin Chugh (30) மற்றும் நண்பர் Vivek Bhatia (38) மற்றும் அவரது மகனான Vihan (11) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள்.
dailymail
Bhatiaவின் மனைவியான Ruchi (36), மகன் Abeer (6) ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
விபத்தை ஏற்படுத்திய நபரிடம் விசாரணை
விபத்தை ஏற்படுத்திய காரை 66 வயது ஆண் ஒருவர் இயக்கிவந்துள்ளார். லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
dailymail
இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து இந்திய வம்சாவளியினர் பலியாகியுள்ள இந்த சம்பவம், அவுஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |