லண்டனில் தீயில் கருகி இந்திய வம்சாவளியினர் ஐந்து பேர் பலி: சோகத்தில் முடிந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள்
லண்டனில், இந்திய வம்சாவளிக்குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் பற்றிய தீ, ஐந்து உயிர்களை பலிவாங்கிய சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
லண்டன் வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட தீயணைப்புப்படையினர்
ஞாயிற்றுக்கிழமை இரவு, 10.26 மணியளவில், மேற்கு லண்டனிலுள்ள Hounslow என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தீப்பற்றியதாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் கிடைக்க, சுமார் 70 தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
Credit: UKNIP
சம்பந்தப்பட்ட வீட்டின் தரைத்தளம், முதல் தளம் மற்றும் கூரை வரை தீப்பற்றியெரிந்துகொண்டிருக்க, தீயணைப்பு வீரர்கள் களத்தில் தீவிரமாக இறங்க, தீயின் உக்கிரம் குறைந்ததும், புகை மாஸ்குகளை அணிந்துகொண்டு தீயணைப்பு வீரர்கள் சிலர் அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.
அதிரவைத்த காட்சி
வீட்டுக்குள் நுழைந்த தீயணைப்புக்குழுவினர், அந்த வீட்டின் முதல் தளத்தில் ஐந்து பேர் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
அந்த வீட்டில், Aroen Kishen (40), அவரது மனைவி Seema Ratra (47), மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் வாழ்ந்துவந்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை தீபாவளிப்பண்டிகை என்பதால், அவர்கள் வீட்டுக்கு இரண்டு விருந்தினர்களும் வந்துள்ளார்கள்.
Credit: Supplied / UKNIP
வீடு தீப்பற்றியதில், சீமா, அவரது மூன்று பிள்ளைகள் மற்றும் விருந்தினர் ஒருவர் ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள். இரண்டாவது விருந்தினரைக் காணவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையில், வீடு தீப்பற்றியதும், பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் நுழைய முயன்ற பிள்ளைகளின் தந்தைக்கும் தீக்காயங்கள் ஏற்பட, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Credit: UKNIP
அந்த வீடு தீப்பற்றியதற்கு பட்டாசுகள் காரணமாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். என்றாலும், அந்த கருத்து இன்னமும் உறுதி செய்யப்படாத நிலையில், அந்த துயர சம்பவம் குறித்து பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |