2024யில் ஆரோக்கிய விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
வருகிற 2024ஆம் ஆண்டில் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆரோக்கியத்தையும், சிலருக்கு பலவீனமான ஆரோக்கியத்தையும் தரப்போகிறது.
எனவே, அடுத்த ஆண்டு ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டிய ராசிக்கார்கள் யார் யார் என்பதை இங்கு காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஆரோக்கியத்தில் கலவையான மாற்றங்களை காண்பார்கள்.
பன்னிரெண்டாம் வீடு மற்றும் ஒன்பதாம் வீட்டில் ராகு மற்றும் கேது இருப்பது உங்களுக்கு உடல்ரீதியாக எரிச்சலூட்டும்.
கடினமான நோய்களால் மேஷ ராசிக்காரர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் உடற்பரிசோதனை செய்து நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துகொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது உடலில் வெப்பநிலை அதிகரிப்பதால் தலைவலி, காய்ச்சல் ஆகிய தொந்தரவுகள் வந்து செல்லும்.
இந்த காலத்தில் நீங்கள் காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் வயிறு மற்றும் கல்லீரலில் உள்ள பித்தம் ஆகிய பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்படலாம்.
காலநிலை மாற்றத்தினால் சளி, தலைவலி, முதுகுவலி போன்றவையும் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கும் ஆண்டின் தொடக்கம் சற்று பலவீனமாக இருக்கும். நீங்கள் உடல் உபாதைகளையும், துன்பங்களையும் சந்திக்க நேரிடலாம்.
எனவே முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திடீர் மற்றும் எதிர்பாராத நோய்களை சந்திக்க நேர்ந்தாலும் அவை மிக விரைவாக மறைந்துவிடும்.
ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் மன அழுத்தம் உண்டாகலாம். மேலும் காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி போன்ற உபாதைகளை சந்திக்க நேரிடும். ஆகையால் நீங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 7ஆம் வீட்டில் ராகுவும், கேதுவும் தங்குவதால் மன உளைச்சல் ஏற்படும்.
ஆறாம் வீட்டில் சனி இருப்பது அவ்வப்போது உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் பலவிதமான நோய்களால் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கண் சம்பந்தமான பிரச்சனைகள்,கால்களில் வலி, கணுக்கால் வலி, காயம் மற்றும் சுளுக்கு போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
எனவே யோகா, தியானம் அல்லது இயற்கையில் நேரத்தை செலவிடுவது போன்றவை மனம், உடல் மற்றும் ஆன்மாவை வளர்க்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |