பிரான்ஸ் நாட்டுக் கொடிக்கு பதிலாக பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட கொடி... பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம்
பிரான்சிலுள்ள பிரபல நினைவிடம் ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரம்மாண்ட கொடி ஒன்று பறக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து, கடும் சர்ச்சை உருவாகியது.
சர்ச்சையைத் தொடர்ந்து கொடி அகற்றப்பட, அதற்குப் பின்னும் அதனால் உருவான பரபரப்பு அடங்கவில்லை.
பிரான்சிலுள்ள Arc de Triomphe என்ற நினைவிடத்தில், பிரம்மாண்ட ஐரோப்பிய ஒன்றியக் கொடி ஒன்று திடீரென பறக்கவிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து வலது சாரி தலைவரான Marine Le Pen, பிரான்ஸ் கொடிக்கு பதில் ஐரோப்பிய ஒன்றியக் கொடியை பறக்கவிட்டது நாட்டின் அடையாளத்தின் மீதான தாக்குதல் என்று கூறினார்.
ஆனால், அரசு அமைச்சர் ஒருவர், ஐரோப்பிய ஒன்றியக்கொடி தற்காலிகமாகத்தான் பறக்கவிடப்பட்டதாக தெரிவித்தார். அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பொறுப்பை அடுத்த ஆறு மாதங்களுக்கு பிரான்ஸ் வகிக்க உள்ளது. அதைக் குறிப்பதற்காகவே தற்காலிகமாக ஐரோப்பிய ஒன்றியக் கொடி பறக்கவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Présider l’Europe oui, effacer l’identité française non! Je demande solennellement à Emmanuel Macron de rétablir notre drapeau tricolore à côté de celui de l’Europe sous l’arc de Triomphe. Nous le devons à tous nos combattants qui ont versé leur sang pour lui. pic.twitter.com/4tQAGwZKmg
— Valérie Pécresse (@vpecresse) December 31, 2021
ஆனால், வலது சாரியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியக்கொடி அகற்றப்பட்டது.
ஆனால், கொடி அகற்றப்பட்ட பிறகும் அது தொடர்பிலான விவாதங்கள் அடங்கவில்லை. ஐரோப்பிய விவகார அமைச்சரான Clément Beaune, வலது சாரியினரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஐரோப்பிய ஒன்றியக் கொடி அகற்றப்படவில்லை என்றும், ஏற்கனவே திட்டமிட்டபடிதான் அது அகற்றப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
இந்த ஞாயிற்றுகிழமை அந்தக் கொடியை அகற்றுவது என ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம், அதன்படிதான் கொடி அகற்றப்பட்டது என்று கூறியுள்ளார் அவர்.
சில நேரங்களில் அந்த நினைவிடத்தில் பிரான்ஸ் நாட்டுக் கொடி பறக்கவிடப்படும், அதுவே தற்காலிகாலிகம்தான், நிரந்தரம் அல்ல என விளக்கமளித்துள்ளார் அவர்.