அண்ணாமலை வீட்டின் முன் இருந்த கொடிக்கம்பம்: கடைசியில் நேர்ந்த சோகம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த கொடிக்கம்பத்தால் ஏற்பட்ட மோதலில் பரபரப்பு ஏற்பட்டது.
கொடிக்கம்பத்தால் பிரச்சனை
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. அங்கு, அவரது வீட்டின் முன்பு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால், அண்ணாமலையின் வீட்டின் முன்பு சுமார் 50 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தை பாஜகவினர் நட்டு வைத்திருந்தனர்.
இதில், நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொலிசார் பேச்சுவார்த்தை
அண்ணாமலை வீடு முன்பு பாஜவினரும், எதிர்ப்பு தெரிவித்த பொது மக்களும் ஒன்றாக கூடியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்பு, இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொலிசில் புகார் அளித்தனர்.
தகவலிருந்து வந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் மற்றும் பொலிசார் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அனால், அவர்கள் உடன்படவில்லை. பின்பு, போராட்டம் நடத்திய இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தள்ளு முள்ளு
இதனைத்தொடர்ந்து, கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். பின்பு, கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு ஜேசிபி வாகனத்தை பொலிசார் கொண்டு வந்தனர்.
இதனால், பாஜகவினர் ஆவேசமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பொலிஸாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் வந்தது.
அதில், ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |