லண்டனில் திருமணத்திற்கு பின்னர் கணவரின் பாலினம் குறித்து தெரிந்து அதிர்ந்த பெண்: பின்னர் நடந்த கொடூரம்
லண்டனில் பாகிஸ்தானிய பெண் ஒருவர் திருமணத்திற்கு பின்னர் தமது கணவர் தன்பாலின ஈர்ப்பாளர் என அறிந்து அதிர்ந்து போன நிலையில், குறித்த பெண்ணை கொடூர சித்திரவதைக்கு உட்படுத்திய மொத்த குடும்பத்திற்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணவர் தன்பாலின ஈர்ப்பாளர்
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் தற்போது 28 வயதாகும் Shuaib Arshid என்பவருக்கும் 2016ல் குடும்பத்தினர் ஒப்புதலுடன் பாகிஸ்தானில் வைத்து திருமணம் நடந்துள்ளது.
Image: MPS
ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தமது கணவர் தன்பாலின ஈர்ப்பாளர் எனவும், தனது பெற்றோரிடம் இருந்து அதை மறைத்து வந்துள்ளார் எனவும் தொடர்புடைய பெண் தெரிந்து கொண்டு அதிர்ந்து போயுள்ளார்.
அதன் பின்னர் கணவராலையே கிழக்கு லண்டனில் பெற்றோரின் குடியிருப்பில் 17 மாதங்கள் சிறை வைக்கப்பட்டு, கொடூர சித்திரவதை அனுபவித்துள்ளார். ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் வாகனத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை குடித்துவிட, இறுதி கட்டத்தில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
18 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், Shuaib Arshid என்பவரின் பெற்றோர், சகோதரர் அகீல் அர்ஷித், சகோதரி Zaib ஆகியோருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Image: MPS
2016ல் Shuaib Arshid என்பவருக்கு 22 வயதாக இருக்கும் போது பெற்றோர்கள் ஒப்புதலுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2017 அக்டோபர் மாதம் Mallard Way பகுதியில் குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளனர்.
ஆனால் தமது கணவன் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிந்து கொண்ட பின்னர், குடும்பத்தினரிடம் இருந்து கடும் சித்திரவதைகளை அனுபவித்துள்ளார். மேலும், Arshid Sadiq தமது மருமகளை கொடூரமாக நடத்தியுள்ளார். கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றிய அவர், அலைபேசியையும் பறித்துள்ளார்.
நான்கு ஆண்களுடன் உடல் ரீதியான தொடர்பு
குடியிருப்பில் இருந்து வெளியே செல்லவும் அனுமதி மறுத்துள்ளார். ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் இயந்திர எண்ணெய் குடித்துவிட, மருத்துவ உதவிக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என்றே குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
Image: MPS
திருமணத்திற்கு பின்னரும் Shuaib Arshid நான்கு ஆண்களுடன் உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 2019 ஏப்ரல் மாதம் தொடர்புடைய பெண் Shuaib Arshid பிடியில் இருந்து தப்பிக்கும் வரையில், கடும் சித்திரவதை அனுபவித்துள்ளது நீதிமன்ற விசாரணையில் அம்பலமானது.
இந்த வழக்கில், Shuaib Arshid என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |