நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஒரே ஒரு பொருள் போதும்: இப்படி பயன்படுத்துங்கள்
ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
நரை முடியை கருப்பாக மாற்ற கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற ஆளிவிதை ஒன்று போதும்.
முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடியை கருப்பாக மாற்ற ஆளிவிதை ஹேர்பேக் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆளி விதை- 100g
- கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
- வைட்டமின் இ கேப்ஸ்யூல்- 3
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஆளிவிதை சேர்த்து அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
பின் நன்கு கொதித்ததும் ஜெல் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அனைத்து பிறகு ஆறவைத்து வடிகட்டி எடுத்துகொள்ளவும்.
அடுத்து வடிகட்டிய ஜெல்லுடன் கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் இ கேப்ஸ்யூல் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் இந்த ஜெல்லை தலைமுடியில் நன்கு உச்சந்தலை முதல் தடவி 10 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசி எடுத்துக்கொள்ளவும்.
இந்த ஹேர்பேக்கில் ஒமேகா 3 என்ற சத்து இருப்பதால், இது முடிக்கு உறுதியை தந்து இளநரை வருவதையும் தடுக்கிறது.
இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தி வருவது முடியின் வலிமையை அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |