முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் லட்டு.., தினம் ஒன்று சாப்பிட்டால் போதும்
பொதுவாக அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இந்த லட்டுவை தினம் ஒன்றாக சாப்பிட்டு வர தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும்.
இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான லட்டை எப்படி தயாரிப்பதை என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு எள்ளு- 1 கப்
- ஆளிவிதை- 1கப்
- பூசணி விதை- ¼ கப்
- கசகசா- ¼ கப்
- வெல்லம்- ½ கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- நெய்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் கருப்பு எள்ளை நன்கு கழுவி வறுத்து பொரிந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதே கடாயில் ஆளிவிதையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் பூசணி விதையை மற்றும் கசகசாவையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து ஒரு மிக்ஸியில் வறுத்து ஆறவைத்த எள்ளு, ஆளிவிதை, பூசணி விதை மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி நெய் சேர்த்து லட்டுவாக பிடிக்கலாம். இதனை லட்டை தினமும் ஒன்றாக சாப்பிட்டு வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |