ஒரே வாரத்தில் வெள்ளையாக மாற உதவும் 2 பொருட்கள்.., எப்படி பயன்படுத்துவது?
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், இயற்கையான முறையில் முகத்தை பொலிவாக்க இந்த இரண்டு பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆளி விதை- 2 ஸ்பூன்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஆளி விதைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் அரைத்து வைத்துள்ள ஆளி விதைகளை தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றினால் பாதி அளவிற்கு தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் வைத்து நன்கு காய்ச்சவேண்டும்.
இதற்கடுத்து சூடு ஆறியவுடன் இந்த கலவையை முகத்தில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். தொடர்ச்சியாக வாரத்திற்கு ஒருமுறை இதனை பயன்படுத்தினால் சருமம் பொலிவுடன் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |