ஐபிஎல் 2025யில் CSK தொடர்ச்சியாக 4வது தோல்வி: பயிற்சியாளர் கூறிய விடயம்
பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக துடுப்பாடியதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தெரிவித்துள்ளார்.
CSK தொடர் தோல்வி
சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
பஞ்சாப் அணி நிர்ணயித்த 220 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி ஆடிய சென்னை அணி 201 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
டெவோன் கான்வே 69 (49) ஓட்டங்களும், ஷிவம் தூபே 42 (27) ஓட்டங்களும் விளாசினர். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்த 4வது தோல்வி இதுவாகும்.

ஸ்டீபன் பிளெம்மிங்
இந்த நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் (Stephen Fleming) போட்டி குறித்து கூறுகையில், "நாங்கள் கொஞ்சம் சிறப்பாக துடுப்பாட்டம் செய்ததே சாதகம்.
Top orderயில் எங்களுக்கு சில விடயங்கள் கிடைத்தன. அது கொஞ்சம் குறைவாக இருந்தது.
அதனால் நாங்கள் துரத்தலை (chase) கட்டமைக்க முடிந்தது. நாங்கள் நீண்ட காலமாக ஆட்டத்தில் இருக்கிறோம், இது ஒரு நேர்மறையான அம்சம்" என தெரிவித்துள்ளார்.
[
]Taking the positives and moving ahead! #PBKSvCSK #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/2qKVRWj5hZ
— Chennai Super Kings (@ChennaiIPL) April 9, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |