குடிபோதையில் பணிக்கு வந்த விமான ஊழியர்: சுவிஸ் விமான நிறுவனம் நடவடிக்கை
சுவிட்சர்லாந்தில் குடிபோதையில் பணிக்கு வந்த விமான ஊழியர் ஒருவருக்கு விமானத்தில் ஏற தடை விதிக்கப்பட்டது.
பாதுகாவலர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்
ஜெனீவாவில் 34 வயது விமான ஊழியர் ஒருவர் பணிக்கு வந்தபோது, அவரைப் பார்த்த பாதுகாவலர்களுக்கு, அவர் மது அருந்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, மது அருந்தியதைக் கண்டுபிடிக்க உதவும் சுவாசக் கருவிகள் உதவியுடன் அவர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.
பரிசோதனையில், அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது. விமான ஊழியர்கள் பணியின்போது மது அருந்தியிருப்பது சட்டப்படி குற்றம் என்பதால், அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை.
அத்துடன், அவருக்கு ஜெனீவா நீதிமன்றம் ஒன்று 5,400 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்ததுடன், 710 ஃப்ராங்குகள் வழக்குக்கான செலவையும் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |