விமானங்கள் விபத்தில் சிக்கும் போது கருப்பு பெட்டியில் தகவல் இருப்பது எப்படி?
விமானங்களோ அல்லது ஹெலிகாப்டர்களோ விபத்தில் சிக்கும் போது, அதில் இருக்கும் கருப்பு பெட்டியில் விமான விபத்திற்கு முன் என்ன நடந்தது என்பதை அறிய முடியும் என்று கூறப்படும், அதைப் பற்றிய முழு தகவல்களை பார்ப்போம்.
நடுவானில் பறக்கும் விமானமோ அல்லது ஹெலிகாப்டாரோ விபத்தில் சிக்கினால், அதில் இருக்கும் கருப்பு பெட்டி தேடி எடுக்கப்படும். இந்த கருப்புப் பெட்டி, அனைத்து விமானங்களிலும் இருக்கும், இது விமானத்தின் வால்பகுதியில் இருக்கும்.
அதே சமயம் அனைத்து ஹெலிகாப்டர்களிலும் இந்த கருப்பு பெட்டி இருப்பதில்லை, ஏனெனில், இதற்கு அதிக செலவாகும் என்பதால், வைப்பதில்லை. அந்த ஹெலிகாப்டரின் தேவைகள் பொறுத்து இந்த கருப்பு பெட்டி வைக்கப்படும்.
இந்த கருப்பு பெட்டி வைப்பதன் மூலம், விமானமோ அல்லது ஹெலிகாப்டாரோ விபத்தில் சிக்கினால் அதற்குரிய காரணத்தை நம்மால் அறிய முடியும்.
கருப்பு பெட்டி
இந்த கருப்பு பெட்டியை கடந்த 1953-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுபிடித்தார்.
இதில் யாரும் திறக்க கூடாது என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். இந்த கருப்பு பெட்டி, விமானத்தின் நிகழ்வுகளை சில வினாடிக்கு ஒருமுறை பதிவு செய்யும் பறக்கும் வேகம், உயரம், விமானியரின் காக்பிட் உரையாடல், காற்றின் அழுத்தம், எரிபொருள் அளவு என 88 வித தகவல்கள் இதில் பதிவாகும்.
சுமார் 4 கிலோ எடை கொண்ட இந்த கருப்பு பெட்டியில், சிப் மற்றும் சர்க்கியூட் போர்டு வைக்கப்பட்டிருக்கும். காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்,விமானி - ஏர் டிராபிக் கன்ட்ரோலர் இடையான உரையாடல் பதியப்படும்.
அது, 2 மணி நேர அளவுக்கு பதியலாம் பிளைட் டேட்டா ரெக்கார்டர் பகுதியில் விமானத்தில் தொழில்நுட்ப விபரங்கள் பதியப்படும்.
அதை, 25 மணி நேர அளவுக்கு பதியலாம்
தண்ணீரில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்தாலும் இதிலிருந்து 30 நாட்கள் வரை சிக்னல் கிடைக்கும்
விமானம் எப்படி சேதமடைந்தாலும், கறுப்பு பெட்டி சேதமடையாது. இது 1100 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.