திணறும் பயணிகள்... ஸ்தம்பிக்கும் விமான நிலையங்கள்: 1200 விமானங்கள் ரத்து
அமெரிக்க அரசாங்கம் முடக்கப்பட்டுள்ளதால், ஊதியமில்லாமல் தொடர்ந்து பணியாற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் அழுத்தம் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரத்தான விமானங்கள்
இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை மட்டும் அமெரிக்கா முழுவதும் 40 விமான நிலையங்களில் ரத்தான விமானங்களின் எண்ணிக்கை 1200 கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் அட்லாண்டா, நியூயார்க், டென்வர், சிகாகோ, ஹூஸ்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள விமான நிலையங்களும் தொடர்புடைய பட்டியலில் உட்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார காப்பீட்டு மானியங்கள் தொடர்பாக குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், அக்டோபர் 1 ஆம் திகதி முதல் நிதி நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து ஃபெடரல் முகமைகள் பெரும்பாலானவை முடக்கப்பட்டு வருகின்றன.
விமான நிலைய ஊழியர்கள் உட்பட பல அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறார்கள் அல்லது ஊதியமற்ற விடுப்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த 6 வாரங்களாக நீடிக்கும் இந்த நெருக்கடி மிக விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். இந்த நிலையிலேயே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,
முதற்கட்டமாக 4 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதுடன், தற்போது இந்த நிலை நீடிக்கும் என்றால், 20 சதவீத விமானங்கள் ரத்தாகும் மோசமான நிலைக்கு நிர்வாகம் தள்ளப்படலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த விமான சேவைகளில் 1200க்கும் மேற்பட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 சதவீதம் விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 94 சதவீத விமானங்கள் உரிய நேரத்தில் புறப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நெருக்கடியில், அட்லாண்டாவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன், சிகாகோ ஓ'ஹேர், டென்வர் மற்றும் பீனிக்ஸ் விமான நிலையங்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வியாழக்கிழமை 6,800
மட்டுமின்றி, அமெரிக்க மக்கள் அதிகமாக பயன்படுத்தும் குறைந்த கட்டண விமான சேவைகள் அதிகமாக ரத்தாகியுள்ளதால், மக்கள் திணறி வருகின்றனர்.
இதனிடையே, அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி, ஜனநாயகக் கட்சியினரை குற்றம் சாட்டி, அவர்கள் அரசாங்கத்தை மீண்டும் இயக்க வாக்களிக்க வேண்டும் என்றார்.

இந்த நிலையில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிடுகையில், திட்டமிடப்பட்டபடி ஒவ்வொரு நாளும் 220 விமானங்கள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட சுமார் 170 விமானங்களை ரத்து செய்வதாக டெல்டா ஏர் லைன்ஸ் தெரிவித்துள்ளது.
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் சுமார் 100 விமானங்களை ரத்து செய்துள்ளது. ஆனால், வியாழக்கிழமை மட்டும் 6,800க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் தாமதமாகின, சுமார் 200 விமானங்கள் அன்று ஒருநாளில் ரத்து செய்யப்பட்டன.
இந்த 38 நாள் அரசு முடக்கத்தத்தின் போது, 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களும் 50,000 பாதுகாப்புத் திரையிடுபவர்களும் ஊதியமின்றி வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |