சுவிஸ் விமானக் கட்டணங்கள் தொடர்பில் ஒரு முக்கிய செய்தி
சுவிஸ் விமானக் கட்டணங்கள் மேலும் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் விமானக் கட்டணங்கள் உயரலாம்
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சுவிட்சர்லாந்தில் விமானக் கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து வந்துள்ளன.

இந்நிலையில், வரும் மாதங்களில் விமானக் கட்டணங்கள் மேலும் உயரக்கூடும் என ஒப்பீட்டுச் சேவை நிறுவனமான கம்பாரிஸ் என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, விமானப்பயணிகள் அதைவிட தற்போது கிட்டத்தட்ட 70 சதவிகிதம் அதிகமாக செலவிடுகிறார்கள் என்று கூறியுள்ளது கம்பாரிஸ் நிறுவனம்.
இந்நிலையில், இது முடிவல்ல, அடுத்த 12 மாதங்களில் விமானக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறும் அந்நிறுவனம், அதற்கான முக்கியக் காரணிகள், அதிகரித்த எரிபொருள் விலை, பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் ஆகியவை என்கிறது.
கம்பாரிஸ் நிறுவனத்தின் பொருளாதார நிபுணரான மைக்கேல் கூன் என்பவரின் கருத்துப்படி, குறிப்பாக, பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |